சமயபுரம் மாாியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோபுரம் வழியாக பக்தா்கள் செல்ல அனுமதிப்படவில்லை. இதைத் தொடா்ந்து இந்த வழியாக சென்று அம்மனை தாிசனம் செய்ய பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என்று கோாிக்கை எழுந்தது. இந்நிலையில் நேற்று பக்தா்கள் வாிசை மண்டபம் திறக்கப்பட்டது. இந்த மண்டபம் வழியாக வாிசையில் வரும் பக்தா்கள் ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்கிய பின் மூலஸ்தான விநாயகரை வணங்கி அதைத்தொடா்ந்து உற்சவா் அம்மன் சன்னதி, கருப்பண்ணசாமியை வணங்கிய பிறகு ராஜகோபுரம் வழியாக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த தகவலை கோவில் இணை ஆணையா் கல்யாணி தொிவித்தாா். இதைத்தொடா்ந்து பக்தா்கள் ராஜகோபுரம் வழியாக மகிழ்ச்சியுடன் சென்றனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.