மத்திய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சகம் செய்தது, வெள்ள பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி ரூபாய் கோரிக்கையை அலட்சியப்படுத்தியது, நீட் தேர்வை ரத்து செய்யாதது, நிதிநிலை அறிக்கையில் பாரபட்சம் காட்டும் மோடி அரசைக் கண்டித்து திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் இன்று(14-08-2024) திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி. சேரன், மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில நிர்வாகிகள் புலவர் முருகேசன், மைக்கேல்ராஜ், பெல் ராஜமாணிக்கம், துரைராஜ், எஸ்.ஆர்.செந்தில்குமார், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, திலகவதி, கார்த்திகேயன், வழக்கறிஞர் ஹென்றி சின்னப்பன், ஜான்சன், மலர், விவேக், ரோஷன் சுபாஷ் மணி, வட்ட செயலாளர் ஆட்டோ சாதிக் மற்றும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாநகர பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் துரை வைகோ எம்பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்சி விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது மதவாத அரசியல் செய்வதற்காக தான். இது கண்டிக்கத்தக்க விஷயம். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கி இருப்பதாக பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று கூறினார்.
Comments are closed.