Rock Fort Times
Online News

எம்ஜிஆர் குறித்து அவதூறு : ஆ.ராசா மீது திருச்சி மாநகர அதிமுகவினர் போலீசில் புகார்

திமுக எம்.பி ஆ.ராசா தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை விமர்சித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது அதிமுகவினரையும், எம்ஜிஆர் ரசிகர்களையும் கொந்தளிப்படைய வைத்து இருக்கிறது. இந்த நிலையில் ஆ.ராசா பேச்சுக்கு எதிராக திருச்சி மாநகர அதிமுகவினர் கண்டோன்மெண்ட் போலீசில் புகாரளித்துள்ளனர்.

திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர் அளித்த புகார்மனுவில். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 25ம் தேதி திமுக சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ஒன்றை நான் யூடியூப் சேனல் வழியாக பார்க்க நேரிட்டது. இதனை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர். இவ்வாறு எம்ஜிஆர் குறித்து அவதூறு பரப்பிய ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.மேலும் அந்த பதிவினை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. . இதில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை. சுரேஷ், சசிகுமார், ஜெயராமன், சுரேஷ்,செல்வராணி,புவனேஸ்வரி, சாகர்,தினேஷ் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்