அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள், தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். அனைத்து துறை தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் :
பெரும்பான்மையான அரசு அலுவலகங்களில் திருக்குறளும், தமிழ் கலைச் சொற்களும் காட்சிப்படுத்தப்படவில்லை. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும். மேலும் திருக்குறளின் முப்பாக்களில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய அதிகாரங்களில் அதன் பொருளுடனும் தமிழ் ஆட்சிச் சொல் அகராதியில் உள்ள சொற்களில் இருக்கும் ஆங்கிலச் சொல் ஒன்றையும், அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருக்குறள் மற்றும் தமிழ் கலைச் சொற்கள் எழுதும் பணிகளை கண்காணித்து அறிக்கை அனுப்பவும் இறையன்பு உத்தரவிட்டிருக்கிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.