Rock Fort Times
Online News

லிவ்-இன் காதலியை 50 துண்டுகளாக வெட்டி வன விலங்குகளுக்கு இரையாக்கிய கொடூர காதலன் கைது…!

ஜார்கண்டின் குந்தி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் நரேஷ் பெங்கிரா (வயது 25). அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுடன் லிவ்-இன் உறவில்( திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்வது) இருந்து வந்துள்ளார். நரேஷ் தமிழகத்தில் உள்ள  கறிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அவருடன் 2 ஆண்டுகளாக அந்த இளம்பெண் உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சில காலத்திற்கு முன், ஜார்கண்டுக்கு திரும்பிய நரேஷ், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  ஆனால், அதுபற்றி லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணிடம் எதுவும் கூறவில்லை. இதன்பின்பு, மனைவியை ஊரிலேயே விட்டு விட்டு, மீண்டும் தமிழகத்திற்கு வந்து அந்த இளம்பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண் நரேஷிடம் சொந்த ஊருக்கு செல்வோம் என தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர்கள் இருவரும் ராஞ்சி நகருக்கு சென்று, நரேஷின் ஜோர்டாக் கிராமம் நோக்கி சென்றுள்ளனர். ஆனால், முன்பே திட்டமிட்டபடி, ஆட்டோவில் பெண்ணை ஏற்றி சென்ற நரேஷ் வீடு அருகே நிற்கும்படி கூறி விட்டு, வீட்டுக்குள் சென்று ஆயுதங்களை மறைத்து எடுத்து வந்துள்ளார். இதன்பின்பு, அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, துப்பட்டா கொண்டு அவரை கொலை செய்து, உடலை 50 துண்டுகளாக வெட்டி இருக்கிறார். பின்னர் உடல் பாகங்களை  வனவிலங்குகளுக்கு இரையாக அவற்றை விட்டு, விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி மனைவியுடன் வாழ தொடங்கியிருக்கிறார். ஆனால், அந்த பகுதியில் இருந்த நாய் ஒன்று பெண்ணின் கையுடன் சுற்றி திரிந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு அமன்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி நரேஷை கைது செய்தனர். லிவ்-இன் உறவில் இருந்த காதலியை, காதலன் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்