Rock Fort Times
Online News

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு…!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு...!

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த கடந்த 7ம் தேதி நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி 12ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 நாட்கள் விசாரணை நடத்தினர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 300க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டதாக தெரிகிறது. செந்தில்பாலாஜியிடம் 3000 பக்க குற்றப்பத்திரிக்கை நகலை நீதிபதி வழங்கினார். செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரின் நீதிமன்றம் காவல் ஆகஸ்ட் 28ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் செந்தில்பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச்  செல்லப்பட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்