Rock Fort Times
Online News

திருச்சியில் கார் மோதி மாநகராட்சி டிரைவர் பலி…

திருச்சி புத்தூர் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் செந்தில்ராஜ் (வயது 48). மாநகராட்சி நகர பொறியாளரின் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். தற்போது அதவத்தூரில் வீடு கட்டி வசித்து வந்தார். திருமணமான இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் பணியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் மாநகராட்சி அலுவலக வாசலில் இருந்து வெளியே வந்து எதிர்ரோட்டில் வலது  பக்கமாக திரும்பும் போது ஒத்தக்கடை முத்தரையர் சிலை பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செந்தில்ராஜ் படுகாயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   திருச்சி தலைமை தபால் நிலையம்| ஒத்தக்கடை வழியாக நீதிமன்றம் செல்லும் சாலையில் பள்ளியின் அருகே இரண்டு, மூன்று வேகத்தடைகள் முன்பு இருந்தது. ஆனால் தற்போது வேகத்தடைகள் இல்லாததால் வாகனங்கள் அதிவேகத்தில் வருகிறது .இதனால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், வேகத்தடை இல்லாததால் தான் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.  இனியாவது விபத்துகளை தடுக்க அந்த சாலையில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்