திருச்சி கொள்ளிடம் ஆறு தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட வாலிபரால் சர்ச்சை…! ( வீடியோ இணைப்பு)
இன்றைக்கு பல வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது ட்ரெண்டிங்காக உள்ளது. அந்தவகையில் திருச்சியில் அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் பலர் திருச்சி வந்திருந்தனர். அவர்களில் ஒரு வாலிபர் திருச்சி கொள்ளிடம் பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டார் . அதனை மற்றொரு வாலிபர் செல்போனில் வீடியோ எடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொள்ளிடம் பாலத்தில் வாகனங்கள் செல்லும்போது தவறி ஆற்றுக்குள் விழுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த தடுப்புச்சுவரில் ஒரு வாலிபர் சாகசத்தில் ஈடுபடுவது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் சிலர் இதுபோன்று சாகசத்தில் ஈடுபடும் வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஏற்கனவே, திருச்சி மலைக்கோட்டை ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட பெண்கள் உள்பட ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.