ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் தினமும் நூற்றுக்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று ( ஏப்.25 ) அரக்கோணம் அருகேயுள்ள திருவாலங்காடு என்ற ரயில் நிலத்திற்கு அருகில், ரயில் தண்டவாள இணைப்புகளில் உள்ள போல்டுகளை மர்ம நபர்கள் கழட்டி விட்டுள்ளனர். வழக்கமான தண்டவாள பரிசோதனைக்காக சென்ற ட்ராக் மேன் இதை கண்டறிந்து, உடனடியாக ரயில்வே மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.நிலைமை சீரானதைத் தொடர்ந்து இப் வழித்தடத்தில் குறைந்த வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே ஓட்டுநர்களுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. தண்டவாளத்தில் உள்ள போல்ட்டுகளை கழற்றி ரயிலை கவிக்க சமூக விரோதிகள் சதி செய்துள்ளனரா ? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை அருகே உள்ள கவரப்பேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தில் உள்ள போல்ட்டுகள் கழற்றப்பட்டதால் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.