பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளை(பிப்.5) முதல் நடைபயணம்: திருச்சியில் 7-ம் தேதி நடக்கிறது..!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படும் பாஜக அரசை கண்டித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நாளை (பிப்.5) மதியம் 2 மணியளவில் எனது தலைமையில் சென்னை, திருவள்ளூர், ஆவடி, செங்கல்பட்டு, காஞ்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் நடைபயணம், கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெரு, வேளச்சேரி சாலை சந்திப்பில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகிலிருந்து, மேற்கு தாம்பரம் – சண்முகம் சாலை வரை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதேபோன்று, பிப்.7-ம் தேதி திருச்சியிலும், 8-ம் தேதி திண்டுக்கல்லிலும், 9-ம் தேதி தென் காசியிலும், 12-ம் தேதி கோவையிலும் நடைபயணம் நடைபெறும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். முதல்வருக்கு நன்றி செல்வப்பெருந்தகை வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் “சென்னை – விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு இந்திரா காந்தியின் பெயரை சூட்ட வேண் டுமென்று முதல் வருக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். அதன்படி, பேருந்து நிலையத்திற்கு இந்திரா காந்தியின் பெயரை சூட்டி அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.

Comments are closed.