மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் டிக்கெட்டுக்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் என்று நடத்துனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக பேருந்து பயணிகள் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நகர பேருந்துகளில் டிக்கெட் வாங்க சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது என்றும், டிக்கெட்டுக்கு பயணிகள் அளிக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு மீதி தொகையை வழங்க வேண்டும் என்றும் நடத்துனர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.