திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று ( 20.10.2023 ) நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மத்திய அரசு முழுமையான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, இந்திய அளவில் சமூக நீதியை நிலைநாட்ட ஆவண செய்ய வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி இளம் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பினை இக்கூட்டம் பாராட்டுகிறது. பா.ஜ க அரசின் விஸ்வகர்மா யோஜனாவை கண்டித்து வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 3-ந் தேதி வரை திராவிட கழக தலைவர் கி.வீரமணி மேற்கொள்ளும் தொடர் பரப்புரை பயணத்தை அனைத்து கட்சி தலைவர்கள், கட்சி சாராத அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரின் பேராதவுடன் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.