மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர், தான் கொண்டு வந்த கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் 300 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், அதே விமானத்தில் பயணித்த மற்றொரு பயணி 53 கிராம் எடை கொண்ட தங்கத்தை மறைத்து கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 353 கிராம் ஆகும். அதன் இந்திய மதிப்பு ரூ.27 லட்சத்து 20 ஆயிரம் என அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார்.
Comments are closed.