திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வருக்கு பணி நிறைவு பாராட்டு விழா…
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு...
திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ளது, பிஷப் ஹீபர் கல்லூரி. இக்கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர் டி. பால் தயாபரன். இவரது நிர்வாக திறமையின் காரணமாக இக்கல்லூரி சமீபத்தில் சிறப்பு அந்தஸ்தை பெற்றது. இவரது 37 ஆண்டு கால அயராத கல்வி பணியின் காரணமாக இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தனர். மேலும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பலர் பணி புரிந்து வருகின்றனர். இக்கல்லூரியின் முதல்வராக திறம்பட பணியாற்றிய இவர் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா அலுமுனி அசோசியேசன் சார்பாக திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் நடந்தது. எச்இபிஏஏ துணை முதல்வர் இ.ஜார்ஜ் தர்ம பிரகாஷ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில், ஜோசப் கல்லூரி முதல்வர் எம்.ஆரோக்கியசாமி சேவியர், ஜமால் முகமது கல்லூரி முதல்வர் இஸ்மாயில், காவேரி கல்லூரி முதல்வர் சுஜாதா, பேராசிரியர் சாத்தப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும், கிராமாலயா நிறுவனர் மற்றும் சி.இ ஓ. தாமோதரன், அமெரிக்காவில் உள்ள அலுமினி குழுமத்தைச் சேர்ந்த முரளி, சாமுவேல் மில்லர் மற்றும் சரவணராஜ், கல்லூரி முதல்வர்( ஐ. சி.) பிரின்சி மெர்லின் உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து டி.பால் தயாபரன் நன்றி தெரிவித்து பேசினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.