Rock Fort Times
Online News

சவுக்கு சங்கர் மீது அடுக்கடுக்காக பாயுது புகார் ..!

தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இந்தநிலையில்  திருச்சி மாவட்டத்தில், நேரடியாக தேர்வு செய்யப்பட்டு தற்போது முசிறி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் யாஸ்மின், திருச்சி மாவட்டம் சைபர் கிரைம் போலீசில் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தார்.  அதன்பேரில்,  சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்படி குற்ற செயலுக்கு தூண்டுதலாக இருந்த பெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் இரண்டாம் குற்றவாளியாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இதேபோல, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வருண் குமாரிடமும் பெண் காவலர்கள் பலர் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்