Rock Fort Times
Online News

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் . குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஆளுநர் ஆர் என். ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி.முர்முவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் ஆளுநர் மீதான 15 பக்க புகார் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அனுப்பி உள்ளார் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்று புகார் தெரிவித்து முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் ரவிக்கும் கருத்து வேறுபாடு நிலை வருவதால் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் கடிதம் அனுப்பினார் இதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இடம் ஆலோசனை நடத்துமாறு ஆளுநருக்கு அறிவுரை வழங்கினார் இதை அடுத்து தனது கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வருக்கு ஆளுநர் மீண்டும் கடிதம் எழுதினார் இந்த சூழ்நிலையில் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர் எம் ரவி சந்தித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்