Rock Fort Times
Online News

காட்டுப்பன்றி தாக்கி உயிர் இழந்தவர் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்… * ரூ.10 லட்சம் வழங்கப்படும் என வனத்துறை உறுதி!

திருச்சி மாவட்டம், உத்தமர்சீலி அருகே கணபதி(70) என்பவர் அவருடைய தோட்டத்திற்கு சென்ற போது அங்கு வந்த காட்டு பன்றி ஒன்று கணபதியை தாக்கி அவரை கடித்தது.இதில் பலத்த காயமடைந்த கணபதி, உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல சகாதேவன் என்பவரையும் காட்டுப்பன்றி தாக்கியதில் அவர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் கணபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு உரிய நீதி வேண்டும், அவருடைய குடும்பத்தாருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 14) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உயிரிழந்த கணபதி குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சகாதேவனுக்கு அவருடைய சிகிச்சைக்கான நிதி உதவி செய்வதாகவும், காட்டுப்பன்றிகள் ஊருக்குள் வந்தால் அவற்றை பிடித்து வேறு வன பகுதியில் விடுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்