திருச்சி சிட்டி பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து போலீசாருக்கு கமிஷனர் காமினி அறிவுரை…!
திருச்சி மாநகரில் சில நாட்களாக வழிப்பறி, செல்போன் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றன. இது மட்டும் இல்லாமல் ஸ்ரீரங்கத்தில் ரவுடி பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி திருச்சி மக்களை அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதனால், மாநகரில் குற்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கவும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூகவிரோத செயலில் ஈடுபடுவோரை கைது செய்யவும் மாநகர காவல் ஆணையர் காமினி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நள்ளிரவு திருச்சி மாநகரில் அனைத்து காவல் நிலையங்களில் உள்ள 50 இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் 14 நான்கு சக்கர ரோந்து வாகன பணிகளில் ஈடுபடும் போலீசாரை மன்னார்புரம் ரவுண்டானா அருகில் ஒன்றிணைத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி அறிவுரை கூறினார். இரவு ரோந்து பணியில் இருக்கும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.
Comments are closed.