Rock Fort Times
Online News

பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிப்பு

 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி மழலையர் பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி என 3 பள்ளிகளும் ஒரே கட்டடத்தின் 3 பகுதிகளில் இயங்கி வந்தன. இந்த பள்ளியில் கடந்த 2004 -ம் ஆண்டு ஜூலை 16 -ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இதன் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.   இதனையொட்டி

பள்ளி வளாகம் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் இறந்து போன 94 குழந்தைகளின் புகைப்படங்களின் முன்பாக பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும், கும்பகோணம் பாலக்கரையில் இருந்து அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஊர்வலமாக வந்து பள்ளி முன்பு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்