Rock Fort Times
Online News

திருச்சியில்  கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்ட போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி…! 

திருச்சி ஹோலி கிராஸ்  கல்லூரி,  சாக்சீடு தொண்டு நிறுவனம் ஆகியவை   இணைந்து அகில உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
சாக்சீடு இயக்குனர்  பரிமளா வரவேற்றார்.  கல்லூரி முதல்வர்  இசபெல்லா ராஜகுமாரி  போதை ஒழிப்பு தின உறுதிமொழியை  முன்மொழிய நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.  திருச்சி மாநகர காவல் ஆணையர்  காமினி  போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து சிறப்புரை யாற்றினார்.    திருச்சி வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையர் விவேகானந்தன், உதவி ஆணையர் நிவேதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ஹோலி கிராஸ் கல்லூரி, காவேரி மகளிர் கல்லூரி, இந்திராகணேசன் கல்லூரி மாணவ- மாணவிகள் என சுமார் 1500 பேர்  கலந்து கொண்டனர்.  பேரணியானது, சாக்சீடு நிறுவனத்தில் துவங்கி பிஷப் ஹீபர் பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. பள்ளியில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை ஹோலி கிராஸ் கல்லூரி  மாணவிகள் நடத்தினர். சி.டபிள்யு.சி.  உறுப்பினர் டாக்டர் பிரபு,  போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  முன்னதாக ஆர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் டயஸ் நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்