Rock Fort Times
Online News

துவாக்குடி சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடி வடக்கு தேனீர் பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் லோகேஷ் ( வயது 22). இவரது நண்பர் கௌதம் (20). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் இருவரும் ஸ்கூட்டரில் திருச்சியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது மாடு ஒன்று சாலையில் குறுக்கே வந்ததால், மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பிய போது பின்னால் வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், பின்னால் அமர்ந்திருந்த கௌதம் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் கௌதமிற்கு பலத்த காயமும், லோகேஷ்க்கு லேசான காயமும் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் கௌதமை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து துவாக்குடி போலீசில் லோகேஷ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சர்புதீன் மகன் தமிம்அன்சாரி (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்