திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள , தேனுார், முருங்கபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது40). இவரது மகள் காயத்திரி (வயது20) திருச்சி எ.புதுார், ராஜிவ் காந்தி நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த டிச.22ந் தேதி காயத்திரி செல்போனில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர் அவரை கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து காயத்ரி தன் அறையில் மயங்கி கிடந்துள்ளார். பின்னர் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை அழகர் சாமி அளித்த புகாரின் பேரில் எ.புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.