சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக #IWD2023 அமையட்டும்! பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு ஆகியவற்றைத் தமிழகத்தின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதி செய்வதே நமது திராவிட மாடல்! பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை!” என்று பதிவிட்டுள்ளாா்.