Rock Fort Times
Online News

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் :  திருச்சி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.. ( படங்கள் )

 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர் தமிழக முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பிரார்த்தனையாகவே நடைபெற்று வருகிறது. இந்த வகையில் கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி திருச்சியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு கூட்டு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் வெறும் வரிசையாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். உலகில் பிறந்து தங்களுக்காக சிலுவையில் தனது இன்னுயிரை தியாகம் செய்த இயேசுவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம் . உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கம் முதலே விழாக்கோலம் காணப்பட்டது.

   

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு திருச்சி மேலப்புதுாாில் உள்ள புனித மாியன்னை பேராளயம், பாலக்கரை உலகம் மீட்பா் பசிலிக்க சகாய மாதா பேராலயம் மற்றும் எடத்தெரு பகுதியில் உள்ள புனித வியாகுல அன்னை பேராலயம் என்னும் பழைய கோயில், ஜோஸப் கல்லுாாியில் உள்ள லுாா்து அன்னை பேராலயம், ஸ்ரீரங்கம் புனித அந்தோணியார் தேர்பவனி அமலா ஆசிரமம் ஆகிய பழமை வாய்ந்த தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டு பிரார்த்தனை வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டது .இதில் சிறுவர்கள் இளைஞர்கள் வயதானவர்கள் என்று ஏராளமான மக்கள் குடும்பமாக வருகை தந்து சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிறிஸ்துவ மக்கள் ஒரு மாத காலமாக கடுமையாக விரதம் மேற்கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்க காத்திருந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் விழா தேவாலயங்களில் சிறப்பு வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்