Rock Fort Times
Online News

திருச்சி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் மருத்துவ முகாம்….

மேயா் அன்பழகன் ஆய்வு...

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5, வார்டு எண் 9 உறையூர் வடக்கு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மற்றும் வார்டு எண் 11 சோழராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமினை மேயர் மு. அன்பழகன் பாா்வையிட்டாா். மருத்துவ முகாமினை பார்வையிட்ட மேயர் அன்பழகன் பள்ளியை தூய்மையாக பராமரிக்கவும், பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியை கிருமி நாசினி கொண்டு வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார். மாநகராட்சி பொறியாளர்கள் வாரம் ஒரு முறை பள்ளிகளின் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து அனைத்து பள்ளிகளிலும் உள்ள தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். முன்னதாக உறையூர் மருத்துவமனை சாலையில் உள்ள புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மேயர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் சதீஷ்குமார் , உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா , மாமன்ற உறுப்பினர் விஜய ஜெயராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்