திருச்சி முத்தரசநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் . இவரது மனைவி காயத்ரி, மகள் யாஷிகா. காயத்ரியின் உறவினர் வெண்ணிலா மற்றும் குழந்தை யாஷிகா மூவரும் ஸ்கூட்டரில் முருங்கைப்பேட்டை ரயில்வே கேட்டை கடந்து சென்ற போது , இவர்கள் ஸ்கூட்டர் மீது திருச்சியிலிருந்து கரூர் சென்ற லோடு வேன் மோதி விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் குழந்தை யாஷிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயத்ரி மற்றும் வெண்ணிலாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனை வந்த காயத்ரி சிறிது நேரத்தில் உயிாிழந்தாா். இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் . லோடு வேனை ஒட்டி வந்த நாமக்கல் பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார்..ஓட்டுனர் விஜய் மது அருந்திவிட்டு வேனை ஓட்டியுள்ளாா் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்..


Comments are closed, but trackbacks and pingbacks are open.