சமூக சேவை மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிகின்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என இரண்டு பிரிவுகளில் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று சென்னையில் நடைபெறுகின்ற விழாவில் முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. அந்தவகையில், சிறந்த சேவை புரிந்தமைக்காக 2023- ம் ஆண்டுக்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு திருச்சியைச் சேர்ந்த ஆர்.தினேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது மற்றும் சான்றிதழ், ரொக்க பரிசு ரூ.1 லட்சத்தை வழங்கி பாராட்டினார்.
இவர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தும் வாழ்த்து பெற்றார். அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.