Rock Fort Times
Online News

அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. எனவே கடந்த 7-ம் தேதி தொடங்க இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு 11-ந்தேதி நடத்தப்பட இருப்பதாக தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் சென்றுவிட்டது. இதனால் குடியிருப்புகளில் இருக்கும் மக்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 7 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நாளைதான் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மழை வெள்ளத்தில் மாணவர்களின் புத்தகங்கள் சேதமடைந்துள்ளதால் படிக்க சிரமப்படுகின்றனர், எனவே நாளை ( 11.12.2023 ) தொடங்க வேண்டிய தேர்வுகள் புதன் கிழமை ( 13.12.2023 ) தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என்றும் முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்