சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 2 அமைச்சர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு…!
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்று வரும் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா பெருந்திரளணி நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று(02-02-2025) திருச்சி வந்தார். அவருக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன், போலீஸ் கமிஷனர் காமினி, எம்பிக்கள் துரை வைகோ, அருண் நேரு, எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், சௌந்தர பாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின்குமார், அப்துல்சமது, மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, தெற்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் மற்றும் மத்திய, வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Comments are closed.