மதுரையில் புதுநத்தம் சாலையில் ரூ.215 கோடியில் 7 தளங்கள், நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. 5.5 லட்சம் புத்தகங்கள் வைக்கும் அளவுக்கு பரப்பளவு கொண்ட நூலகத்தில் தற்போது 3.5 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், வரவேற்பு அரங்கம் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. நூலக கட்டிட நுழைவாயில் முன்பு கலைஞரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராவோர், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தின் திறப்பு விழா இன்று ( 15.07.2023 ) நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார். விழாவில், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, அ.ராசா, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பட்டிமன்ற நடுவா் சாலமன்பாப்பையா, அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.