கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (17-09-2025) திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் விமான நிலையத்திலிருந்து பிரச்சார வேன் மூலம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை நோக்கி புறப்பட்டார். அவருக்கு வழி நெடுகிலும் கூடியிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெரியார் திருவுருவ படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பிக்கள் ராசா, கனிமொழி, சிவா, அருண் நேரு , மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments are closed.