திமுக தலைவரும் , தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்,’என்றார். மேலும் பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதலமைச்சருக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜகத் தமிழக தலைவர் அண்ணாமலை,பாமக நிறுவனர் ராமதாஸ்,பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்,தெலங்கானா ஆளுநர் தமிழிசை, பீகாா் முதலமைச்சா் நிதிஷ்குமாா் உள்ளிட்ட பல தலைவா்கள் பறிந்தநாள் வாழ்த்துக்களை தொிவித்து வருகின்றனா். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி இன்று காலை சென்னை, சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்குகிறார். பசுமையான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்பதையும், ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கத்தை வலியுறுத்தியும் இதனை முதலமைச்சர் அவர்கள் முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை நந்தனத்தில் இன்று ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், உள்ளிட்ட பிரபல அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தனது 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் , சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.