Rock Fort Times
Online News

பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி…

திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர்கள் புடைசூழ மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உதயநிதிக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தெளிவாய் உள்ளது கொள்கை
திடமாய் உள்ளது இயக்கம்
ஒளியாய் உள்ளது பாதை
உழைப்பதுதான் உன் வேலை பின்னோரை முன்னேற்ற
முன்னோரைப் பின்பற்று உதயநிதிக்கு
இதய வாழ்த்து  என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து காட்டியவர் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின். தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றி வரும் தம்பி உதயநிதி ஸ்டாலின்க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று  நடிகா் கமலஹாசன் வாழ்த்தியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்