Rock Fort Times
Online News

சென்னை திரும்பிய செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு…

உலக செஸ் தொடரில் முன்னணி வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்து 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா அஜர்பைசானிலிருந்து இன்று ( 30.8.2023 ) விமானம் மூலம் சென்னை திரும்பினார். ஏற்கனவே, பாராட்டு மழையில் நனைந்து வரும் அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு, ஏராளமான விளையாட்டு வீரர்கள் மற்றும் செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வீரர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் அரசு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரக்ஞானந்தா சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்