Rock Fort Times
Online News

சென்னையில், வருகிற 14-ம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்…

பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு....

தி.மு.க எம்.பி க்கள் கூட்டம் வருகிற 14-ம் தேதி நடைபெறும் என்று தி.மு.க.பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 14-7-2023 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். கூட்டத்தில், தி.மு.க.மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்