பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) ஜூலை 4, 5, 7, 8, 9 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லும். கன்னியாகுமரி -ஹைதராபாத் சிறப்பு ரயிலானது (07229) வருகிற 4-ம் தேதியும், கன்னியாகுமரி- ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வருகிற 5 ம் தேதியும், மாதா வைஷ்ணவ தேவி காட்ரா திருநெல்வேலி விரைவு ரயிலானது (16788) வரும் 3-ம் தேதியும் மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
கால தாமதம்:
சென்னை- எழும்பூர் திருச்சி சோழன் அதிவிரைவு ரயிலானது (22675) வரும் 5, 6, 7- ம் தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 30 நிமிடங்கள் நின்று தாமதமாகச் செல்லும். மதுரை- கச்சிகுடா சிறப்பு ரயிலானது (07192) வரும் 2 ம் தேதி 80 நிமிஷங்கள் தாமதமாக காலை 10.40 மணிக்கு பதிலாக நண்பகல் 12 மணிக்குப் புறப்படும். ராமேசுவரம்- சார்லப்பள்ளி சிறப்பு ரயிலானது (07596) வரும் 4 ம் தேதி காலை 10 மணிக்கு பதிலாக இரவு 7 மணிக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.