Rock Fort Times
Online News

திருச்சி-காரைக்கால் உள்ளிட்ட ரெயில்களின் சேவையில் மாற்றம்…!

திருச்சி- காரைக்கால் டெமு ரெயில் திருச்சி ரெயில்வே கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி- காரைக்கால் டெமு ரெயில் வருகிற 12, 14, 16, 18-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதே போல் காரைக்கால்- திருச்சி டெமு ரெயில் இதே தேதிகளில் காரைக்கால்- தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மதுரை கோட்டத்தில் சோழவந்தான் -வாடிப்பட்டி இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இதேபோல் மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11 மற்றும்14-ந்தேதிகளில் மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும். இதே போல் கன்னியாகுமரி -ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரெயில் வருகிற 13-ந்தேதி மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும். குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 10 முதல் 14-ந்தேதி வரையும், கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு ரெயில் வருகிற 12-ந்தேதியும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும். இந்ததகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து ள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்