Rock Fort Times
Online News

பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்…!

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால் – திருச்சி – காரைக்கால் டெமு ரயில்களானது (76820, 76819) ஆகஸ்ட் 24, 25, 27, 28 ஆகிய தேதிகளில் காரைக்கால் திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்களானது திருச்சி-திருவாரூர் இடையே மட்டும் இயங்கும். திருச்சி- காரைக்கால் பயணிகள் ரயிலானது (56818) வருகிற 24, 25ம் தேதிகளில் காரைக்கால்- திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி – திருவாரூர் இடையே மட்டும் இயங்கும். இதே ரயிலானது வருகிற 27, 28 ம் தேதிகளில் காரைக்கால் -நாகூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதுடன் திருச்சி – நாகூர் இடையே மட்டும் இயங்கும். காரைக்கால்- தஞ்சாவூர் பயணிகள் ரயிலானது (56817) வருகிற 24, 25-ம் தேதிகளில் காரைக்கால்- திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூர்-திருவாரூர் இடையே மட்டும் இயங்கும். இதே ரயிலானது, வருகிற 27, 28 ம் தேதிகளில் காரைக்கால்- நாகூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதுடன், தஞ்சாவூர் – நாகூர் இடையே மட்டும் இயங்கும்.

இதேபோல,
ராமேசுவரம்-திருச்சி – ராமேசுவரம் விரைவு ரயில்களானது (16849, 16850) வருகிற 25, 26, 28 ஆகிய தேதிகளில் மானாமதுரை – ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்களானது திருச்சி-மானாமதுரை வரை மட்டுமே இயங்கும். திருச்சி- ஈரோடு டெமு ரயிலானது (56809) வருகிற 21, 23, 26, 29 ஆகிய தேதிகளில் ஈரோடு – கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி – கரூர் இடையே மட்டும் இயங்கும். செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வருகிற 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகச் செல்லும்.
மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வருகிற 28, 31-ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகச் செல்லும். குருவாயூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயிலானது (16128) வருகிற 27, 28, 29, 30-ம் தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகச் செல்லும். கன்னியாகுமரி – ஹவுரா அதிவிரைவு ரயில் (12666) வருகிற 30-ம் தேதியும், கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் (07229) வருகிற 29-ம் தேதியும் மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகச் செல்லும். திருவனந்தபுரம் சென்ட்ரல்- திருச்சி இன்டர்சிட்டி அதிவிரைவு ரயிலானது (22628) வருகிற 20-ம் தேதி தேவைப்படும் இடங்களில் 50 நிமிடங்கள் தாமதமாக நின்று செல்லும். மேற்கண்ட தகவல் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்