Rock Fort Times
Online News

திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்…!

திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 16848) இன்று (மார்ச் 12) முதல் 17-ந்தேதி வரையிலும், மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 12666) இன்று (மார்ச் 12) மற்றும் 15-ந்தேதியும், கன்னியாகுமரி-ஹவுரா அதி விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:-16128) நாளைமறுநாளும் (சனிக்கிழமை). குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 16128) இன்று (வியாழக்கிழமை) முதல் 15-ந்தேதி வரையிலும், கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்:- 07229) நாளை (மார்ச் 13) மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோயம்புத்தூர்- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:-16322) நாளை மறுநாள் (சனிக்கிழமை), மதுரை சந்திப்பை தவிர்த்து கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாகவும், திருவனந்தபுரம் சென்டிரல்- திருச்சி அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 22628) வருகிற 18-ந் தேதி விருதுநகர், மானாமதுரை, மதுரை வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்