கர்நாடக மாநிலம், ஹூப்ளி-ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.07355) சேவை மார்ச் 22, 29 ஏப்ரல் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளிலும், ராமேஸ்வரம்-ஹூப்ளி இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07356) சேவை மார்ச் 23, 30 ஏப்ரல் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் இரு மார்க்கமாகவும் தலா 6 சேவை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே தெற்கு ரெயில்வே தெரிவித்திருந்தது. இந்தநிலையில், ராமேஸ்வரம்-ஹூப்ளி இருமார்க்கமாகவும் 3 சேவைகள் ரத்து செய்யப்பட்டு, 3 சேவைகள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,-ஹூப்ளியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேஸ்வரம் வரும் சிறப்பு ரெயில் ஏப்ரல் 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி செல்லும் சிறப்பு ரெயில் ஏப்ரல் 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்கள் ராமேஸ்வரம் செல்லாமல் ராமநாதபுரத்தில் நிறுத்தப்படும். இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.