அனைத்து மத்திய, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். கேரளாவை போல் தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கி என உருவாக்கிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது போல் 20% போனஸ் வழங்க வேண்டும். வணிக வங்கியில் உள்ளது போல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து பலப்படுத்திட வேண்டும். சிறப்பு ஊதியம் தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழக அரசிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இன்று(23-01-2024) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, தமிழகம் முழுவதும் 23 மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தின் முதல் நாளான இன்று திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுச்செயலாளர் ரகுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் துரை, பொருளாளர் ராஜப்பா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நாளையும் நடக்கிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.