Rock Fort Times
Online News

பிறை சரிவர தென்படாததால் மிலாது நபி 17-ம் தேதி கொண்டாட்டம்: விடுமுறை நாளிலும் மாற்றம்…!

தமிழகம் முழுவதும் வருகின்ற 16-09-2024ம் தேதி( திங்கட்கிழமை) மிலாது நபி கொண்டாடப்படுவதாக இருந்தது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை அறிவித்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  ஆனால், எதிர்பார்க்கப்பட்ட பிறை சரிவர தென்படாததால் வருகின்ற 17ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமை காஜி, தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தமிழக அரசு அலுவலகங்களுக்கு செப்டம்பர் 17ம் தேதி பொது விடுமுறை அளிப்பதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் அரசாணையில் குறிப்பிட்டு உள்ளார்.  முன்னதாக செப்டம்பர் 16ம் தேதி மிலாடி நபிக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்