Rock Fort Times
Online News

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பொய் தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி 15 அன்று தொடங்கி ஏப்ரல்-4ம் தேதி வரை நடக்கின்றன. இந்தசூழலில், சி.பி.எஸ்.இ. வினாத்தாள் கசிந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை மறுத்த சிபிஎஸ்இ நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வினாத்தாள்கள் கசிந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகின்றன. இது ஆதாரமற்ற போலியான தகவல்கள். மாணவர்கள், பெற்றோர்கள் இதனை நம்ப வேண்டாம். தவறான தகவல் பரப்புவோரை சி.பி.எஸ்.இ. உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை, மாணவர்களே இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், சி.பி.எஸ்.இ. விதிகளின்படியும், இந்திய தண்டனை சட்டத்தின்படியும் அவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருக்குமாறும், பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்த வேண்டும். இது, தேர்வு பணிகளை சீர்குலைக்கும் செயல். பெற்றோர், மாணவர்கள், பள்ளிகள் என அனைத்து தரப்பினரும் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்