காவேரி மருத்துவமனை குழுமம், திருச்சி தென்னூர் மற்றும் கண்டோன்மெண்ட் பகுதிகளில் மருத்துவமனைகளை நிறுவி தலை சிறந்த மருத்துவர்கள் மூலம் நவீன கருவிகளுடன் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையை அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலை, அரியமங்கலம், சுந்தரம் தெருவில் காவேரி கிளினிக் 24×7 என்ற பெயரில் புதிய கிளினிக்கை அமைத்துள்ளது. இதற்கான திறப்பு விழா இன்று(14-07-2025) நடைபெற்றது. விழாவில், மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று புதிய கிளினிக்கை திறந்து வைத்தனர். இதுகுறித்து சிறப்பு மருத்துவர்கள் கூறுகையில், நவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையின் சேவையை அருகில் உள்ள மக்கள் மட்டுமின்றி பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகளும் பயன்படுத்தி கொள்ளலாம். 24 மணி நேரமும் அவசர சேவை பிரிவு செயல்படுகிறது. வெளி நோயாளிகளுக்கு தகுந்த நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. ரத்தப் பரிசோதனை மற்றும் அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதய சிகிச்சைகளுக்கான நவீன பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 24 மணி நேரமும் மருந்தகம் செயல்படுகிறது. நோயாளிகள் தங்கள் விவரங்களை 0431-4077777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Comments are closed.