சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்- கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை…!
கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும். சிறப்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 முறை கிராம சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றிருந்தார். இந்நிலையில் இன்று (அக்.11) நடைபெற்று வரும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நம் நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள்தான். விடுதலை இந்தியாவின் வலிமை கிராமங்கள் என்று காந்தி கூறினார். கிராம பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் நிர்வாகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என திட்டங்கள் தீட்டியுள்ளோம். இத்திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டிற்கு அடிப்படை. முல்–அமைச்சராக 3-வது முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். கிராம சபைக் கூட்டங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம். கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அதற்காகத்தான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூடங்கள் நடத்தப்படுகின்றன. இது கிராமங்களின் தேவைகள், வளர்ச்சி இலக்குகள், நலன் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றும் விழா. குடியிருப்பு, சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள் தான், இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என கூறினார் காந்தியடிகள்.100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பல்வேறு திட்டங்களின் கீழ் 21 ஆயிரம் கி.மீ. சாலைகளை மேம்படுத்தி உள்ளோம். சமத்துவம், சமதர்மம், சமூகநீதியை நிலையாட்டி வருகிறது திராவிட மாடல் அரசு. கிராமங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களை செய்தால் பெரிய பெரிய நன்மைகள் வந்து சேரும். கிராமங்களை சுத்தமாக வைத்திருப்பதில் யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம். தண்ணீரை பணம் போன்று பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டும். மழை நீரை சேமிக்கும் பொறுப்பு நாம் அனைவரிடம் உள்ளது. இழிவான தன்மையுடன் சாலை பெயர்களில் சாதி பெயர்கள் இருந்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்கவேண்டும். மக்கள் முன்வைக்கும் குறைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தார்.
Comments are closed.