Rock Fort Times
Online News

தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்​லாத ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்…!

தமிழக சட்டமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரிவித்துள்​ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. அன்​றில் இருந்தே தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்துவிட்​டன. இதையடுத்​து, தமிழகம் முழு​வதும் பறக்​கும் படை​யினர் மூலம் கண்​காணிப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. தற்போது 234 தொகு​தி​களி​லும், தொகு​திக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்​காணிப்​புக் குழுக்​கள் என்ற விகிதத்​தில், தமிழகம் முழு​வதும் 2,160 பறக்​கும் படைகள், 2,160 நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் தீவிர கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இன்றைய (மார்ச் 18) நிலவரப்படி, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 42.65 கோடி ஆகும். தமிழகம் முழு​வதும் ரூ. 2.37 கோடி ரொக்கமும், ரூ.0.18 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ. 2.88 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.16.42 கோடி மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரூ.20.80 கோடி மதிப்பிலான இலவசங்கள், பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்