தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் முருகன். இறுதியாக ஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 2017-18 ஆம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக பணியாற்றியபோது அந்த அலுவலகத்தில் தனக்கு கீழ் பணியாற்றிய பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி புகார் அளித்தார். மேலும் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சைதாப்பேட்டை 11-வது மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு முருகன் ஆஜராகவில்லை. இதைஅடுத்து ஓய்வு பெற்ற ஐஜி முருகனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Comments are closed.