பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய அவதூறு பதிவுக்காக எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுதாக்கல் செய்திருந்தார். சென்னை உயர்நீதிமனற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கில் ஆன்லைன் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற எஸ்.வி சேகர் தரப்பு கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. குடும்ப பிரச்சனைகள் தொடர்பான விவகாரமாக இருந்தால் காணொளி மூலம் ஆஜராக அனுமதிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆன்லைன் மூலம் ஆஜராகும் விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க அறிவுறுத்தியது. இந்நிலையில் அவதூறு வழக்கில் எஸ்.வி சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.