திருச்சி தெற்கு தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 37). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவரிடம், அறிமுகமான லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், அவரது மனைவி பிரதீபா ஆகியோர் பங்கு வர்த்தகத்தில் ₹ 25 லட்சம் முதலீடு செய்தால் 6 மாதத்தில் வட்டியுடன் சேர்த்து ₹50 லட்சம் திரும்பத் தருவதாக உறுதி அளித்தனர். இதை நம்பிய நந்தகுமார் ₹25 லட்சத்தை கடந்த 2021 ஜூன் 20 ம் தேதி அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து தம்பதியிடம் கேட்டபோது,
₹ ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 41 தொகையினை கூகுள் பே மூலமாக கொடுத்தனர். அதன் பின்னர் கடந்த 2023 ல் 2 காசோலைகளை வழங்கினர்.
ஆனால், அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாததால் திரும்ப வந்துவிட்டது. இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசில் நந்தகுமார் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, கணவன்- மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.