முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற தமிழ்நாட்டில் தேர்தலை முன்னிட்டு 17 ம் தேதி முதல் 19ம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி உய்யக்கொண்டான் திருமலை ரோடு சண்முகா நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த செல்வேந்திரன் மற்றும் ஒருவர் மீது திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூ.47 ஆயிரத்து 670 மதிப்பிலான 234 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தேவதானம் பகுதி மற்றும் ஏர்போர்ட் ஸ்டார் நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதிகளில் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த கவியரசன் ( 25) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனி பிள்ளையார் தெருவை சேர்ந்த ரேமண்ட் ( 54) ஆகியோர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த அவர்களைப் பிடித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ரூ.67 ஆயிரத்து 760 மதிப்பிலான 484 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.